நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |

இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு கனடா நாட்டில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்', டொராண்டோ தமிழ் சங்கம் சார்பில் "குறள் இசையோன்" பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. பரத்வாஜ் இசையமைத்த காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, ரோஜாக்கூட்டம், பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் போன்ற பல படங்கள் ஹிட். எதற்காக இந்த படம் என்று விசாரித்தால் இவர் 1330 திருக்குறளை, 1330 பாடகர்களை பாட வைத்து, திருக்குறள் முழுவதையும் இசை வடிவில் உருவாக்கினார்.
கனடா நாட்டில் டொராண்டோ தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற 'உலக திருக்குறள் மாநாட்டில்' பரத்வாஜ் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, 1330 திருக்குறளையும் இசை வடிவில் கொடுத்த அவருக்கு பாராட்டு விழா நடத்தி, 'குறள் இசையோன்' பட்டத்தையும் வழங்கியது. கனடா அரசும் அந்த விழாவில் பரத்வாஜின் திருக்குறள் தமிழ் சேவையை பாராட்டி சர்டிபிகேட் கொடுத்து, கவுரவித்தது.
விழாவில் அந்த நாட்டில் உள்ள தமிழ் பாடகர்கள் பங்கேற்று பரத்வாஜ் இசையமைத்த திருக்குறள் பாடல்களை பாடி, தமிழ் ரசிகர்களை பரவசமடைய வைத்தனர். பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் மேடையில் திருக்குறள் பாடினார். பரத்வாஜ் கூட அந்த நிகழ்ச்சியில் பாடியுள்ளார்.
இதுகுறித்து பரத்வாஜ் பேசுகையில் ''12 ஆண்டு கடுமையான உழைப்பில் தான் உருவாக்கிய திருக்குறள் இசை ஆல்பத்திற்கு கனடா நாட்டில் டொராண்டோ தமிழ் சங்கம் விழா எடுத்து, உலக 'திருக்குறள் மாநாட்டில்' கவுரவித்தது மகிழ்ச்சி. 1330 குறளுக்கும் குரல் கொடுத்து, இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் நான் என்பதில் பெருமை'' என்கிறார்.