அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் |

ஹிந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், ஜூனியர் என்டிஆர் உடன் 'தேவரா' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது ராம்சரணுடன் 'பெத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ராம்சரணுடன் நடித்த அனுபவம் குறித்து ஜான்வி கபூர் கூறுகையில், ''ராம்சரணை நான் ரொம்பவே நேசிக்கிறேன். அவர் ஒரு அற்புதமான ஆற்றல் கொண்ட ஜென்டில்மேன். விடாமுயற்சியும் நேர்மையும் கொண்டவர். ஒரு பெரிய நடிகராக இருந்தாலும் அவர் ஒரு மாணவரை போலவே படப்பிடிப்பு தளத்துக்கு வருவார். அவரது அந்த எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அதோடு படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நிறையவே ஒத்துழைப்பு கொடுத்தார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். காரணம் இப்படத்தில் எனக்கு ஒரு வித்தியாசமான சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் புச்சி பாபு'' என்கிறார் ஜான்விகபூர்.