தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

‛அமரன்' படத்தை அடுத்து ஹிந்தியில் ‛ஏக் தின்' என்ற படத்தில் நடித்த சாய் பல்லவி, தற்போது ‛ராமாயணா' படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் சீதை வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபாஸின் ‛கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்தில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்திருந்த தீபிகா படுகோனே அப்படத்திலிருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக கல்கி- 2 படத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவி இடத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், கல்கி- 2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஆண்டு தொடங்கும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.