2025 வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

'துள்ளுவதோ இளமை' படத்தில் தனுசுடன் முக்கிய வேடத்தில் நடித்தவர் அபிநய். பின்னர் பல படங்களில் நடித்து இருந்தாலும், சில ஆண்டுகள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். முன்பு இவர் நடித்த 'கேம் ஆப் லோன்ஸ்' என்ற படம் தீபாவளிக்கு வருகிறது. அந்தப் பட நிகழ்ச்சிக்கு வந்திருந்து தன்னம்பிக்கையோடு பேசினார் அபிநய்.
அவர் பேசுகையில், ''இந்த படத்தில் சற்றே வில்லத்தனமான ஸ்டைலிஷ் ஆன ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த படம் இது. உடல் நல குறைவு காரணமாக சமீபத்தில் நடிக்கவில்லை. அடுத்த கட்ட ட்ரீட்மென்ட்காக காத்திருக்கிறேன். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால் முன்பதிவு செய்து ஆபரேஷன்காக காத்திருக்கிறேன். நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலர் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றி.
கேபிஒய் பாலாவும் உதவி செய்தார். அந்த வீடியோ விமர்சனத்திற்கு உள்ளானது. நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவர் எனக்கு உதவி செய்தார். அதற்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் வீடியோ வெளியிட்டது அது சர்ச்சைகளுக்கு உள்ளானது தனிப்பட்ட விஷயம். உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள். நான் விரைவில் பூரண குணமடைந்து நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை'' என்றார்.