தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ரமேஷ் இலங்காமணி இயக்கத்தில் 'கன்னிமாடம்' ஸ்ரீராம் கார்த்திக், மனிஜாஜித், பாத்திமா நசீம், வைசாலி உட்பட பலர் நடித்த படம் 'மெஸன்ஜர்'. இது காதல் படம், பேய் படம் என்றாலும், இதுவரை இல்லாதவகையில் பேன்டசி பாணியில் உருவாக்கி உள்ளது.
அதாவது, ஹீரோவை காதலிக்கும் கிராமத்து பெண் ஒரு விபத்தில் மரணம் அடைகிறார். ஆனாலும், செல்போன் மெசேஜ் மூலமாக ஹீரோவை தொடர்பு கொள்கிறார். அவருடன் பேசுகிறார். அந்த காதலை ஏற்றுக்கொள்ளும் ஹீரோ அவரை எப்படி திருமணம் செய்கிறார். எப்படி குழந்தை பெற்றுக்கொள்கிறார் என்ற ரீதியில் கதை செல்கிறது. உருவம் இல்லாதவரை காதலிப்பது, அவரை திருமணம் செய்வது, அவருடன் முதலிரவு போன்ற காட்சிகளும் கதையில் இருக்கிறதாம்.
இந்த படவிழாவில் பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய அனுபவம் எப்படி என்று நிருபர்கள் கேட்க, ஹீரோ நெளிந்தார். வழக்கமான படங்களை விட, இது வித்தியாசமாக இருந்ததால், நடிக்க ஓகே சொன்னேன். பேயுடன் குடும்பம் நடத்தி, குழந்தை பெற்றுக்கொள்ளும் இந்த கதையை மக்கள் ரசிப்பார்கள் என்றார் ஸ்ரீராம் கார்த்திக். பேய்க்கு எப்படி குழந்தை பிறக்கிறது என்பதற்கு ஒரு விஞ்ஞான பூர்வ காரணத்தை கிளைமாக்சில் சொல்கிறாராம் இயக்குனர்.