2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

ஒரு படம் ரீரிலீஸில் கூட சாதனை படைக்கிறது என்றால் அது 'பாகுபலி' படமாகத்தான் இருக்கும் என்று சொல்லும்படி ஆகிவிட்டது. ராஜமவுலி இயக்கத்தில் 2015ல் வெளிவந்த 'பாகுபலி 1', 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' ஆகிய படங்களை இணைத்து, கொஞ்சம் காட்சிகளை வெட்டி 'பாகுபலி த எபிக்' என்ற பெயரில் கடந்த வாரம் வெளியிட்டார்கள்.
பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல் நாள் வசூலாக சுமார் 19 கோடியும், இரண்டாவது நாளில் சுமார் 11 கோடியும் வசூலித்து 30 கோடியைக் கடந்துள்ளது. மூன்று மற்றும் நான்காவது நாட்களாக சனி, ஞாயிறு நாட்களில் இப்படம் மேலும் 20 கோடியை வசூலித்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் 50 கோடியைக் கடந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதன் மூலம் இதற்கு முன்பு வெளிவந்த ரீரிலீஸ் படங்களின் சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. புதிய படங்களே ஓடாத போது ஒரு ரீரிலீஸ் படம் இப்படி வசூலிப்பது திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது.