தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த 2013ம் ஆண்டில் ஆனந்த் எல். ராய் இயக்கிய 'ராஞ்சனா' (தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளிவந்தது) என்ற படத்தில் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார் தனுஷ். அதில் குந்தன் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் நடித்த அந்த முதல் படமே 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. அதன்பிறகு பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்', மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'அட்ராங்கிரே' ஆகிய ஹிந்தி படங்களிலும் நடித்தார்.
தற்போது தனுஷ் - ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தேரே இஷ்க் மே' படம் நேற்று (நவ.,28) ரிலீசானது. ஹிந்தியில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம், அங்கு மட்டும் முதல் நாளில் 15 கோடி வசூலித்துள்ளது. முன்னதாக வாரணாசியில் நடைபெற்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், ஹிந்தியில் தனது முதல் கதாபாத்திரமான குந்தன் சங்கரை நினைவுக்கூர்ந்து பதிவிட்டுள்ளார்.
தனுஷின் பதிவில், ''நினைவுப் பாதையில் ஒரு நடை. இதெல்லாம் எங்கிருந்து தொடங்கியது. குந்தன், ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும் என்னை விட்டு விலக மறுக்கும் ஒரு கதாபாத்திரம். பனாரஸின் குறுகிய பாதைகளில் குந்தன் என்ற பெயர் இன்னும் எதிரொலிக்கிறது. மக்கள் என்னை அழைக்கும்போது நான் இன்னும் திரும்பிச் சிரிக்கிறேன்.
எனக்கு குந்தனைக் கொடுத்த மனிதருடன் இப்போது அதே பாதைகளில் நடந்து, அதே வீட்டின் முன் அமர்ந்து, அதே தேநீர் கடையில் இருந்து தேநீர் அருந்தி, புனித கங்கைக் கரையில் நடந்து, ஒரு முழு வட்டம் பூர்த்தியானது போல் உணர்கிறேன். இப்போது சங்கருக்கான நேரம். தேரே இஷ்க் மெய்ன்… ஹர் ஹர் மகாதேவ்'' என்று பதிவிட்டுள்ளார்.