வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 எனது கனவுத் திட்டம் : இயக்குனர் பொன்ராம் பேட்டி | பிரதமர் மோடியின் வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | டைட்டிலை வைத்து விட்டதால் வேறு வழியின்றி பவன் கல்யாணின் பெயரை மாற்றினேன் : ஓஜி இயக்குனர் சுஜித் | டார்க் மேக்கப்பில் நடித்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராதாரவி | பிளாஷ்பேக் : இப்படியும் நடந்திருக்கு | திட்டமிட்டபடி படத்தை முடித்தோம் : விஜய் மகன் ஜேசன் | மகன் படப்பிடிப்பை பார்க்க வந்த தந்தை மம்முட்டி | தமிழ் சினிமாவில் வெற்றி குறைய நடிகர்களின் தலையீடு தான் காரணம் : திருப்பூர் சுப்ரமணியம் | விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேசுக்கு வெற்றியை கொடுக்குமா ‛ரெளடி ஜனார்தனா' |

கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் தொடரும். தருண் மூர்த்தி இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக ஷோபனா நடித்திருந்தார். குடும்ப கதை அம்சத்துடன் ஆக் ஷன் பின்னணி கலந்து உருவான இந்த படம் 230 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் இயக்குனர் தருண் மூர்த்தியும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்று சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் தருண் மூர்த்தி டைரக்ஷனில் மோகன்லால் நடிக்கிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தள்ளுமால, அஞ்சாம் பாதிரா உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஆசிக் உஸ்மான் புரடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குனர் தருண் மூர்த்தி தற்போது பிரேமலு பட நாயகன் நஸ்லேனை வைத்து டார்பிட்டோ என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டு, அடுத்ததாக பிரித்விராஜ் நடிப்பில் ஆபரேஷன் கம்போடியா என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களின் வேலைகளும் முடிவடைந்த பிறகு மோகன்லால் படத்தை இயக்குவார் என தெரிகிறது.