தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சக்தி பீடம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பி.சந்திரகுமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் "புத்தம் புது நேரம்". கே.பரஞ்சோதி இசையமைக்க, முரளி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பரத்வாஜ், சதீஷ் குமார் நாயகர்களாக நடிக்கிறார்கள், சுபஸ்ரீ, ரசியா நாயகியாக நடிக்கிறார்கள்.
படத்தின் அறிமுக விழாவில் நாயகி சுபஸ்ரீ பேசும்போது "விவசாயிகளின் நலன் பற்றி இந்த படம் பேசுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கான்கிரீட் ஜங்கிளாக மாற்றுவதை எதிர்க்கும் படமாக உருவாகியிருக்கிறது. எல்லோரும் முடிந்த அளவு பணத்தை போட்டு எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்து எடுத்திருக்கிறோம். இது என்னுடைய இரண்டாவது படம். முதல் படமும் சந்திரகுமார் சாரின் படம் தான். அவர் என்னுடைய சினிமா வாழ்க்கையின் காட்பாதர். எனக்கு மட்டுமல்ல எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகும் புதுமுக நடிகைகளுக்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர்தான் காட்பாதர்" என்றார்.
இன்னொரு நாயகியான ரசியா பேசும்போது, " நான் மாலத்தீவில் இருந்து நடிக்க வந்திருக்கிறேன். எங்கள் பகுதியில் இருந்து தமிழுக்கு வரும் முதல் நடிகை தான்தான் என்று நினைக்கிறேன். பள்ளி காலத்தில் இருந்தே நடிப்பு மீது ஆர்வம் இருந்தது. இதற்காக நடனம், நடிப்பு கற்று இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க விரும்புகிறேன்" என்றார்.