தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்து ரிலீஸூக்கு தயாராக உள்ள படம் 'வா வாத்தியார்' .
இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு யூடியூப் சேனலுக்கு கீர்த்தி ஷெட்டி அளித்த பேட்டியில் சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்த அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: சூர்யா சாருடன் இணைந்து நான் பாலா'வின் 'வணங்கான்' படத்தில் கிட்டத்தட்ட பாதி படத்தில் நடித்து முடித்தேன். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு திறமையான நடிகர், அவரது கண்கள் நிறைய பேசுகிறது. அவருடன் பணிபுரிவது ஒரு நடிப்பு வகுப்பில் கலந்துகொள்வது போன்று உணர்ந்தேன். அது கடைசி வரை நடக்காமல் போனதை நினைத்து நான் உண்மையில் இதுவரை வருந்துகிறேன்.
நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை. பையா படத்தை எத்தனை முறை பார்த்தேன் எனத் தெரியாது. என் சிறிய வயதில், மங்களூரில் இருக்கும் எனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு நண்பர்கள் இல்லை, அதனால் வீட்டில் டிவி மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது. அங்கிருந்த பையா படத்தைப் சிடியில் போட்டு நாள் முழுக்க பார்த்தேன். படத்தில் என்ன பிடித்தது என்றெல்லாம் தெரியவில்லை. திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு இருந்தேன்.
கார்த்தி, தமன்னாவின் நடிப்பு க்யூட்டாக இருந்தது. பாடல்களும் பிடிக்கும். ஒருமுறை இயக்குனர் லிங்குசாமியிடம் கார்த்தியைப் பார்க்கலாம் எனக் கேட்டு காத்திருந்து நடக்கவில்லை. அதனால், மிகுந்த மனம் உடைந்தேன். பிறகு நதியா மேடம் எனக்காக கார்த்தி சாரிடம் போன் செய்து கொடுத்தார். நான் மிகப்பெரிய ரசிகை எனப் பேசினேன். அவரும் நன்றாகப் பேசினார். அடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு ‛வா வாத்தியார்' படப்பிடிப்பில் அவரே என்னிடம் வந்து, 'நாம் பேசியிருக்கிறோமே ஞாபகம் இருக்கிறதா?' எனக் கேட்டார். முதலில் அவருடன் நடிக்க பயமாக இருந்தது; அதேசமயம ஆர்வமாகவும் இருந்தது. ஒன்று சொல்லுவேன். அது கிரிஞ்சாக இருக்கும். நான் இப்போது கார்த்தி சாரின் ஃபேனில் (ரசிகை) இருந்து ஏசியாக மாறிவிட்டேன். இவ்வாறு கூறினார்.