தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' சீரியல் மூலம் அறிமுகமானவர் மேக்னா வின்சென்ட். ஏற்கெனவே பல மலையாள சீரியல்களில் நடித்திருந்த அவர், 'தெய்வம் தந்த வீடு' தொடரின் மலையாள பதிப்பிலும் நடித்தார். அதை தொடர்ந்து 'பொன்மகள் வந்தாள்' சீரியலிலும் நடித்தார். 'கயல்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார்.
பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் கேரளாவிற்கே திரும்பி சென்று விட்டார். தற்போது அவர் மலையாள சீரியல்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும், தற்போது இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சீரியலை விட விவசாயம் அதிக லாபம் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: இப்போது சொந்த ஊரில் இருக்கிறேன். அவ்வப்போது நடித்துக் கொண்டிருந்தாலும், இயற்கை விவசாயத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். வீட்டுக்குத் தேவையான காய்கறிகளுக்காகத்தான் இதை தொடங்கினேன். கொஞ்சம் பணம் சேர்ந்ததும், எங்க ஊர்லயே ஒரு ஆறு இருக்கு. அந்த ஆற்றின் கரையில் கொஞ்சம் நிலம் வாங்கி 'மேக்னாஸ் பார்ம்'னு தனி பண்ணையே தொடங்கி விட்டேன்.
காய்கறிகள், பழங்கள், கீரை பயிரிடுவதோடு கால்நடைகளும் வளர்க்கிறோம். இப்போது மீன் பண்ணையும் உருவாக்கி இருக்கிறேன். என்கிறார் மேக்னா.