ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

தி மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரித்துள்ள படம் 'முஸ்தபா முஸ்தபா'. பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். சதீஷ் கதைநாயகனாக நடித்திருக்கிறார். மோனிகா சின்கொட்லா, மஹிமா, தேவிகா நாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். வருகிற 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் சதீஷ் பேசியதாவது: இது ஒரு ஜாலியான படமாக இருக்கும். முஸ்தபா முஸ்தபா என்றாலே நமக்கு எல்லாம் நட்பு பாடல்தான் ஞாபகம் வரும். அதனை மனதில் கொண்டு நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தில் கதை அமைத்திருக்கிறோம். பல பெரிய படங்களை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி இந்தப் படத்தை வெளியிடுகிறது. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.
இந்த படத்தில் பெண்கள் மது அருந்தும் காட்சிகள் உள்ளது. ஆணும் பெண்ணும் சமமல்ல. பெண்கள் ஆண்களை விட உயரத்தில் உள்ளனர். பெண்கள் தெய்வத்திற்கு சமம். அதனால், யார் குடித்தாலும் தவறுதான். நான் என் வாழ்க்கையில் இதுவரை சிகரெட், மது தொட்டதில்லை. இதை பெருமைக்காக சொல்லவில்லை. நான் சொன்னதை கேட்டு நாலு பேர் குடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணத்தை கைவிட்டால் சந்தோஷப்படுவேன். என்றார்.




