தமிழ் சினிமா பிரபலங்களின் அறியப்படாத ஆன்மிக நம்பிக்கைகள் | இவங்க இல்லாமல் தங்கச்சி சென்டிமென்ட்டா... : தமிழ் சினிமாவில் தங்கை ரோலில் அசத்தியவர்கள் | சித்தி இத்னானி படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை: தயாரிப்பாளர் கண்ணீர் | எழுத்தாளர் சங்க தேர்தல்: ராஜ்பிரபு தலைவராக தேர்வு | லேடி கேங்ஸ்டராக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் | சாய் பல்லவி : ஒரு படத்தில் 'அமைதி', மற்றொரு படத்தில் 'அதிரடி' | 46வது ஆண்டில் அந்த 7 நாட்கள் : பாலக்காட்டு மாதவனை, வசந்தியை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ஆனந்த் பாபு இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இயக்கிய படம் | ஷாரூக்கானின் 'கிங்' பட அப்டேட் : 'கில்லர்' இல்லை 'லவ்வர்' |

நடிகர் ரவி மோகனுக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். விவாகரத்து வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்கிடையில் ரவி மோகன், கெனிஷா பிரான்சிஸ் என்ற பாடகியை காதலித்து வருகிறார். அவருடன் லிவிங் டு கெதராக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதி மன்றத்தில் கெனிஷா தன்னைப் பற்றி பேசவும், சமூக வலைத்தளங்களில் பதிவிடவும் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். ஆர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்ற நீதிமன்றம், ஆர்த்தி ரவிக்கு எதிராக சமூக வலைதளங்கள் அல்லது பொதுவெளியில் அவதூறு கருத்துக்களைப் பதிவு செய்யவோ, பேசவோ கெனிஷாவுக்கு தடை விதித்துள்ளது. அதோடு கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான அவதூறு கருத்துக்கள் மற்றும் ஆர்த்தி ரவிக்கு எதிரான பதிவுகளை நீக்கவும் உத்தரவிட்டது.