பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார் | ஷோலோ ஹீரோயினாக நடிக்கும் கவுரி கிஷன் | இப்படியும் ஒரு கூத்து : ரிலீஸிற்கு முன்பே ஓடிடியில் தவறாக வெளியான ஹாலிவுட் படம் | படத்தின் ரிலீஸ் தேதியையே டைட்டிலாக்கிய இயக்குனர் | ஓட்டலில் சக பாடகியுடன் நெருக்கம் : மனைவியிடம் கையும் களவுமாக மாட்டிய நாட்டுப்புற பாடகர் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் நடித்த லியாகத் அலிகான் | பிளாஷ்பேக் : போலந்து மொழியில் வெளியான முதல் தமிழ் படம் | அடுத்த வெற்றிக்குத் தயாரான ஜிவி பிரகாஷ்குமார் | ஸ்பிரிட் : தீபிகா படுகோனே விலகியது ஏன்? | டிக்கெட் உயர்வு : தெலங்கானா அரசுக்கு பிலிம் சேம்பர் வேண்டுகோள் |

யு டியூப், ரீல்ஸ் என வீடியோ எடுத்தவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் என பிரபலமாகி வருகிறார்கள். அந்த டிரெண்ட் ஹாலிவுட்டிலும் வந்துவிட்டது.
கர்ரி பார்க்கர் என்ற 26 வயது இளைஞர் ஒருவர் யு டியூபில் பதிவேற்றியிருந்த ஒரு குறும்படத்தைப் பார்த்த ஒரு தயாரிப்பாளர் அவரை அணுகி இருக்கிறார். அதன்பின் உருவானதுதான் 'அப்செஷன்' என்ற ஹாலிவுட் திரைப்படம். சுமார் ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் கடந்த மே மாதம் வெளியானது. தற்போது 156 மில்லியன் யுஎஸ் டாலரை இந்தப் படம் வசூலித்துள்ளது.
இதற்கடுத்து 'பேக்ரூம்ஸ்' என்ற படம் மே 29ம் தேதி வெளியானது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 10 மில்லியன். நான்கைந்து நாட்களில் இப்படம் 126 மில்லியன் யுஎஸ் டாலர் வரை வசூலித்துள்ளது. இப்படத்தை இயக்கிய கேன் பார்சன்ஸ் சில வருடங்களுக்கு முன்பு இதே பெயரில் யு டியுபில் பதிவேற்றியிருந்த சீரிஸ் வீடியோவின் சினிமா வடிவம்தான் 'பேக்ரூம்ஸ்'.
இந்த இரண்டு படங்களின் வரவேற்பும், வசூலும் ஹாலிவுட்டை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவிலும் அடுத்து இது போல சில யு டியூப் பிரபலங்கள் இயக்கி நடித்துள்ள படங்கள் வெளிவர இருக்கின்றன.