'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்' | 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி | விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' | ‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் ஒரே ஒரு காட்சியில் அறிமுகமான மோகன்லால் | மராத்தி தெரிந்திருந்தும் சஞ்சய் தத் வேண்டுமென்றே பேசாமல் தவிர்த்தாரா ? : வெளிச்சம் போட்ட பழைய வீடியோ | உதவி இயக்குனராக இருந்தவர் ‛ஹனுமான் அன்ஷ்' படத்தின் ஹீரோவாக மாறியது எப்படி? | தம்பி பட புரமோஷனில் கலந்து கொண்டு நடனமாடி அசத்திய விஜய் தேவரகொண்டா | பிளாஷ்பேக்: காணாமல் போன சிவாஜி படம் |

தமிழில் அதர்வா நடித்த 'பட்டத்து அரசன்', சித்தார்த் நடித்த 'மிஸ் யூ' போன்ற படங்களில் நடித்த கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத், தற்போது கார்த்தி நடித்துள்ள 'சர்தார்-2' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.
மேலும், தெலுங்கில் தற்போது சிரஞ்சீவி நடித்துள்ள 'விஸ்வாம்பரா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஆஷிகா ரங்கநாத், அடுத்து தெலுங்கில் சன்னி சஞ்சய் இயக்கத்தில் ஸ்ரீ விஷ்ணு நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸின் 39வது படமாக இப்படம் தயாராகி வருகிறது. இன்றைய இளைஞர்களின் போராட்டங்களையும் உணர்வுகளையும் எடுத்துரைக்கும் வகையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.




