Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆஸ்கர் போட்டியில் இளையராஜா இசையமைத்த இன்னொரு படம் | எப்போதும் பரிதாபத்துக்குரியவர்கள்... என்ன செய்யலாம் சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்களை? | தயக்கம் காண்பித்த மகிமா நம்பியார் : நன்றிகளை அடுக்கிய சூரி | ஒரே நேரத்தில் நாலு பட விழா : பரபரப்பான தமிழ் சினிமா | அப்பா, அம்மாவுக்கு நன்றி சொன்னார் : தாத்தா, பாட்டியை மறந்துவிட்டாரா? | மலேசியாவில் கவுதம் மேனன் வெள்ளி விழா | பிளாஷ்பேக் : வித்தியாசமாக நாயகி தேடிய இயக்குநர் | பிளாஷ்பேக் : சினிமாவை நம்பி நாடகத்தை இழந்த டி.கே.எஸ்.சந்திரன் | 'பத்தா' பட விழா : அமைதியாக விஜய்சேதுபதி..., கொந்தளித்த அட்லி | வருமான வரி வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பத்தா' பட விழா : அமைதியாக விஜய்சேதுபதி..., கொந்தளித்த அட்லி

19 செப், 2026 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Patha-Film-Festival-Vijay-Sethupathi-in-silence.
Advertisement

விஜய் சேதுபதி தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் அவர் தலைமை பண்பு பற்றி பேசியிருந்தார். “பிரச்சனை வந்தால் எதிரணி மீது பழி போட்டுவிட்டு ஓடுவது தலைவனுக்கான தகுதி இல்லை” என அவர் பேசியது விஜய்யை குறிப்பிட்டுத்தான் என்று விஜய் ரசிகர்கள் விஜய் சேதுபதியை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில் விஜய்யின் நண்பரும் இயக்குநருமான அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' படத்தின் அறிமுக விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் தனது பேச்சு குறித்து விஜய் சேதுபதி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதுபற்றி எதுவும் பேசவில்லை. ஆனாலும் விஜய் பற்றி பேசினார்.

அவர் பேசும்போது “ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்லியிருந்தேன். அப்போ, விஜய், எனக்கு போன் பண்ணி, 'ரொம்ப நன்றி நண்பா. அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான்'னு சொன்னார். நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. ஏன்னா, அவரே ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவர் மகன் சஞ்சய்க்கு என்னைப் பிடிச்சிருக்குங்கறது எனக்குப் பெரிய ஆச்சர்யம். அவன் ரொம்ப தங்கமான பையன். அவனோட படமும் இங்கே நம்ம படத்தோடு வருது என்று பேசினார்.

ஆனால் தயாரிப்பாளர் அட்லி பேசும்போது விஜய் சேதுபதியை மறைமுகமாக சாடினார். அவர் பேசியதாவது: இன்னைக்கு நான் போட்டிருக்கும் இந்த பேண்ட், சட்டை எல்லாம் என்னுடைய உழைப்பில் கிடைச்சதுனு நினைச்சாலும் என் அண்ணன், தளபதி இல்லேனா இதெல்லாம் சான்ஸே கிடையாது. நான் 'ராஜா ராணி' பண்ணி பேமஸ் ஆனேன். ஆனால் விஜய் அண்ணன் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார். அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்து என் வாழ்க்கையை மாற்றினார். ஷாருக் சாரிடம் இருந்து வாய்ப்பு வந்தது தெரிஞ்சதும், நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அந்த படத்தை பண்ணு உன் வாழ்க்கை மாறிடும்னு சொன்னாரு. அதே மாதிரி மாருச்சு, அதனால் விஜய் அண்ணாவுக்கு மிக்க நன்றி.

ஊர் வாய அடக்க முடியாது. ஆனா ஊர் வாயில் விழுந்துட்டு நாம நம்பி வாழ்ந்துட்டு போறது முட்டாள்தனம். ஊர் ஆயிரம் பேசும். அதனால் எவன் என்ன சொல்றான்னு கேட்காத, நீ ஊருக்கு போணுமா போய்கிட்டே இரு, வாழ்க்கை நீ எங்க போணுமோ அங்கு அழைத்து செல்லும். யார் பேச்சையும் கேட்காத, சின்ன சின்ன பொறிகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

ஏன்னா நம்ம தான் அடுத்த தலைமுறை. இந்த சோசியல் மீடியால, அவரு, அவர சொல்றாரு, இவரு இவர சொல்றாருனு அதெல்லாம் ஒன்னும் இல்ல. சொல்லனும்னா நேரா சொல்லிக்கலாம். அடுத்த தலைமுறை அரசியலில் ஆர்வமாக இருக்க ஒரே காரணம் விஜய் அண்ணா தான். முந்தைய தலைமுறையில் சட்டசபையை நான் பார்த்ததில்லை. ஆனா இன்னைக்கு சட்டசபைல என்ன நடக்குதுன்னு 5 வயசு குழந்தை கூட பாக்குது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வருமான வரி வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்: நீதிமன்றம் உத்தரவுவருமான வரி வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா ... பிளாஷ்பேக் : சினிமாவை நம்பி நாடகத்தை இழந்த டி.கே.எஸ்.சந்திரன் பிளாஷ்பேக் : சினிமாவை நம்பி நாடகத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap