மகள் ஐஸ்வர்யா பற்றி அவதூறு : கமிஷனரிடம் நடிகர் அர்ஜூன் புகார் | அன்பில் அவன் முதல் ஹைக்கூ வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | சினிமாவான ராஜேஷ்குமார் நாவல்: நாளை ரிலீஸ் | 'மக்கள் காவலன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | அமிதாப், அபிஷேக்கை கொல்ல 200 பேர் தயார்: தாதாக்கள் பகிரங்க மிரட்டல் | பொங்கல் ரேசில் இன்னொரு படமா...? : அருண் விஜயின் பிறந்தநாளில் இருளன் முதல்பார்வை வெளியீடு | தொகுப்பாளினிக்கு பாலியல் தொல்லை: அப்பா நடிகர் மீது போலீசில் புகார் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி விஜயகுமாரை அடையாளம் காட்டிய 'அம்மா வந்தாச்சு' | பிளாஷ்பேக்: 100வது படத்தில் நூற்றாண்டு சாதனை | டோரதியால் பெருமை - கீர்த்தி சுரேஷ் : மேடையிலேயே மோதிரம் பரிசளித்த மிஷ்கின் |

2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் 'நந்தன்'. இரா.சரவணன் இயக்கிய இந்தப் படத்தில் சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரகனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வை அழுத்தமாகப் பதிவு செய்த இந்த படம் பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது அதன் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா.சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார்.
நந்தன் இரண்டாம் பாகத்தில் நான் நடிப்பேன் என்று சசிகுமார் பல நேர்காணல்களில் கூறியிருப்பதால் அவர் நடிப்பது உறுதியாகிறது. தற்போதைய நிலையில் 'நந்தன் 2' படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் குறித்த தகவல்கள் மற்றும் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் தொடர்பான முழுமையான விவரங்கள், அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிகிறது.
இதுகுறித்து சரவணன் கூறும்போது “'நந்தன் 2' படத்திலும் சமூக அக்கறை கொண்ட மற்றொரு முக்கியமான பிரச்னையை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது. 'நந்தன்' படத்தை விட இன்னும் அழுத்தமான படைப்பாக சமூக அக்கறை மிக்க படைப்பாக இப்படம் இருக்கும்” என்றார்.




