வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி |
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் விஜய்-விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் படம் வெளியானது. இந்த படத்தை பார்த்தவர்கள் பலரும், சில காட்சிகள் மற்றும் பலரது கதாபாத்திரங்கள், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் சாயலிலேயே இருப்பதாக கூறிவருகின்றனர். இதுகுறித்த ஒப்பீட்டு பதிவு ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதோ அதன் சாராம்சம் வருமாறு ;
ரஜினிகாந்த் - கல்லூரி வார்டன் (சோக பின்னணி கொண்டவர்)
விஜய் - கல்லூரி பேராசிரியர் (சோக பின்னணி கொண்டவர்)
விஜய்சேதுபதி - இரண்டிலுமே முக்கிய வில்லன்
பாபி சிம்ஹா - சாந்தனு (கல்லூரியில் ஹீரோவை எதிர்த்து அதன்பின் அவர்களுடன் கூட்டணி சேர்ந்துகொள்பவர்கள்)
மாளவிகா மோகனன் (பேட்ட) - கணவன் சசிகுமாரின் மரணத்துக்கு பழிவாங்க துடிப்பவர்
ஆண்ட்ரியா (மாஸ்டர்) - கணவன் பிரேமின் மரணத்துக்கு பழிவாங்க துடிப்பவர்
சனந்த் - மேகா ஆகாஷ் (பேட்ட) - கல்லூரி காதலர்கள்
சாந்தனு - கவுரி கிஷன் (மாஸ்டர்) - கல்லூரி காதலர்கள்
குரு சோமசுந்தரம் (பேட்ட) - ஹீரோவின் முன்கதை தெரிந்தவர்
நாசர் (மாஸ்டர்) - ஹீரோவின் முன்கதை தெரிந்தவர்
இதெல்லாம் போக க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் தனது பழைய பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே எதிரியை கொள்கிறார்.. விஜய்யுடன் நடனம் ஆடிக்கொண்டே எதிரியுடன் மோதுகிறார்.