பிளாஷ்பேக் : சிவாஜி பட ரீமேக்கில் கமல் | பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு | விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? |

கடந்த 2019ல் வெளியான காளிதாஸ் படத்திற்கும் அதில் கதாநாயகனாக நடித்த பரத்தின் நடிப்புக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில் இருக்கும் பரத், தற்போது 'யாக்கை திரி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஜனனி ஐயர் கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக சோனாக்சி சிங் ராவத் அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் நடிக்கிறார்.
இக்லூ என்கிற படத்தை இயக்கிய பரத் மோகன் இயக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜன-4ஆம் தேதியன்றே துவங்கியது. இந்தநிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இதற்காக கொல்கத்தா கிளம்பிசென்றுள்ள பரத், தான் கொல்கத்தா வந்தடைந்த விபரத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.