மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
சென்னை : விஜய் பெயரில் ஆரம்பித்த கட்சிக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி தராத நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், தன் பெயரில், புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளார்.
நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் பெயரில், கட்சிஆரம்பிக்க இருந்தார். இதற்காக, மூன்று பெயர்களை தேர்வு செய்து, மத்திய தேர்தல் ஆணையத்திற்கு, எஸ்.ஏ.சந்திரசேகர் கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில், தன் பெயரில் கட்சி ஆரம்பிக்க, விஜய் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சி ஆரம்பித்தால், தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படும் என கருதிய விஜய், இதுகுறித்து, தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம்அனுப்பினார். எஸ்.ஏ.சந்திரசேகர் பரிந்துரை செய்த, மூன்று பெயர்களில், விஜய் பெயர் இடம் பெற்றதால், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரவில்லை. மாற்று பெயரை தேர்வு செய்ய அறிவுறுத்தியது.
இந்நிலையில்,அனைத்திந்திய எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்க, எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்புக்குள், புதிய கட்சியை ஆரம்பித்து, நிர்வாகிகளை நியமிக்கும் பணியில், அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.