ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தமிழ்த் திரையுலகில் கடந்த பல வருடங்களாக நகைச்சுவை நடிகர்களில் முன்னணி நடிகராக இருந்தவர் சந்தானம். திடீரென நடித்தால் நாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்ற கொள்கை முடிவை எடுத்தார்.
அவர் நாயகனாக நடித்த முதல் படம் தோல்வியடைந்தாலும் அதன்பின் வெற்றியை ருசிக்க ஆரம்பித்தார். 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு' அவருக்கு நாயகனாக முதல் வெற்றியைக் கொடுத்தது.
தொடர்ந்து 'தில்லுக்கு துட்டு 2, ஏ 1, டகால்டி' ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. கடந்த வருடம் வெளிவந்த 'பிஸ்கோத்' சுமாரான வெற்றியைத்தான் கொடுத்தது.
தற்போது மேலும் சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். அடுத்து அவர் நாயகனாக நடித்துள்ள 'டிக்கிலோனா' படம் வெளியாக உள்ளது. அதற்குப் பிறகு 'சபாபதி, பாரிஸ் ஜெயராஜ்' ஆகிய படங்கள் வெளியாகலாம்.
மேலும், சில வருடங்களுக்கு முன்பே முடிந்து வெளியாகாமல் இருக்கும் 'சர்வர் சுந்தரம்' படமும் இந்த வருடத்தில் வெளியாகலாம்.
அவர் நாயகனாக நடித்து வந்த 'மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும்' ஆகிய படங்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்குமா என்பது சந்தேகம்தான். மேலும், சில புதிய படங்களில் அடுத்தடுத்து அவர் நடிக்க ஒப்பந்தமாகலாம் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2021ம் ஆண்டில் சந்தானம் நாயகனாக நடிக்கும் நான்கைந்து படங்கள் வெளிவர வாய்ப்புள்ளது.