பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த 'புதுப்பேட்டை' படம் 2006ம் ஆண்டு வெளிவந்தது. வெளிவந்த போது வசூல் ரீதியாக வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், அதற்கு மாறாக தமிழ் சினிமாவில் முக்கியமானதொரு படம் என ரசிகர்கள் அப்படத்தை இன்று வரை பாராட்டி வருகிறார்கள்.
செல்வராகவன், தனுஷ் ஆகிய இருவரின் ரசிகர்களும் 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது எடுப்பீர்கள் என அவர்களிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, அவர்கள் கூட்டணியில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பை புத்தாண்டு அன்று வெளியிட்டார் செல்வராகவன். அப்போது கூட ரசிகர்கள் 'புதுப்பேட்டை' இரண்டாம் பாகத்தைப் பற்றிக் கேட்டனர்.
ஆனால், செல்வராகவன், தனுஷ் மீண்டும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து அப்படத்தின் தலைப்பு 'நானே வருவேன்' என்ற அப்டேட்டும் வெளியானது. 'புதுப்பேட்டை 2' பற்றி எதுவுமே சொல்லவில்லை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் 'நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2' படங்களுக்கு இடையில் 'புதுப்பேட்டை 2' கண்டிப்பாக வரும் எனத் தெரிவித்துள்ளார். 'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் 2024ம் ஆண்டுதான் உருவாக உள்ளது. 'நானே வருவேன்' இந்த ஆண்டிலேயே முடிந்துவிடும். அதற்குள் 'புதுப்பேட்டை 2' படத்தை முடித்துவிட வாய்ப்புள்ளது.