அஜித் குமாரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 இயக்குனர்கள்! | ரன்வீர் சிங் நடித்த ‛துரந்தர்' ஒரு தலைசிறந்த படைப்பு! -பாராட்டிய சூர்யா | பாரீசில் நாளை வெளியிடப்படும் வாரணாசி அறிவிப்பு டீசர்! | அஜித்தின் மங்காத்தா ஜனவரி 23ல் ரீரிலீஸ்! | புதிய சாதனை படைத்தது 'ஜனநாயகன்' டிரைலர் | 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் உரிமம் எத்தனை கோடி தெரியுமா? | யஷ் 40வது பிறந்தநாளில் 'டாக்சிக்' படத்தின் டிரைலர்! | 'அரசன்' படத்தில் தனுஷா? தாணு பதில் | சினிமாவில் அறிமுகமாகும் நடிகர் கலையரசனின் மகள்! | 'டாக்சிக்' படத்தில் ரெபேக்கா ஆக தாரா சுட்டாரியா! |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இப்படத்தை ஓடிடியில் வெளியிட உள்ளதாக கடந்த சில நாட்களாகவே திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் வெளியாக வேண்டிய படத்தை இத்தனை நாட்களாக தியேட்டர் வெளியீடு என காத்திருக்க வைத்துவிட்டு, தற்போது ஓடிடியில் வெளியிட வேண்டிய காரணம் என்ன என திரையுலகத்திலேயே கேள்வி எழுப்புகிறார்கள்.
படத்தை ஓடிடியில் வெளியிடுவதை தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் விரும்பவில்லை என்றே தெரிகிறது. தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில்தான் படத்தை உருவாக்கி இருக்கிறோம் என அவர்கள் தரப்பு வாதமாக உள்ளதாம்.
தனுஷ் ரசிகர்களின் எதிர்ப்பை அடுத்து படத்தை ஓடிடியில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசிக்கிறாராம். ஆனால், அதற்கு தியேட்டர்காரர்கள் கண்டிப்பாக சம்மதம் சொல்ல மாட்டார்கள்.
ஏற்கெனவே, 'ஈஸ்வரன்' படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் தினத்தன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தினார்கள். அப்படியிருக்க இந்தியாவிலும் ஒரே நாளில் ஓடிடியில் வெளியிட கண்டப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
தியேட்டர்கள் சங்கத் தரப்பிலும் தயாரிப்பாளரிடம் ஓடிடி வெளியீடு வேண்டாம் என முறையிட்டுள்ளதாகத் தெரிகிறது. அடுத்த சில நாட்களில் படம் எப்படி வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.




