சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
சிரஞ்சீவி நடித்த 'சைரா' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார் விஜய் சேதுபதி. ஒரு வட்டத்திற்குள் தன்னை அடைத்துக் கொள்ளாமல் வழக்கத்திலிருந்து விலகி பல பரிசோதனை கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்து வெளிவந்த 'மாஸ்டர்' படத்தில் விஜய்யையே ஓவர்டேக் செய்துவிட்டார் என்றும் விமர்சனங்கள் வெளிவந்தன.
விஜய் சேதுபதி அடுத்து நடித்துள்ள தெலுங்குப் படமான 'உப்பெனா' அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இன்று மாலை இப்படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் பாடலான 'நீ கண்ணு நீலி சமுத்திரம்' பாடல் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது- அது முதலே படத்தைப் பற்றிய பேச்சுக்களும் அதிகமானது. டீசர் வெளிவந்த பிறகு அந்த எதிர்பார்ப்பு கூடியது.
தற்போது படத்தின் வியாபாரத்தில் ஏரியாக்களை நல்ல விலை கொடுத்து வாங்க பலர் முன் வந்துள்ளனராம். புச்சி பாபு சனா இயக்கத்தில் சிரஞ்சீவியின் உறவினரான பாஞ்சா வைஷ்ணவ் தேஜ் இப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை சுகுமார் எழுதியிருப்பது படத்திற்கான கூடுதல் பலமாக அமைந்துள்ளது.