2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் |

சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் தெலுங்கில் அறிமுகமானார் விஜய் சேதுபதி. அதையடுத்து விஜய்யுடன் அவர் நடித்த மாஸ்டர் படம் தெலுங்கில் வெளியிடப்பட்டது. இந்த படம் தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு அதிக ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. அதோடு, அவர் பேசிய வசனங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படியான நிலையில், தற்போது தெலுங்கில் தயாராகியுள்ள உப்பென்னா படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. நேற்று மாலை வெளியான இப்படத்தின் டிரைலரில் அவரது வேடத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள டப்பிங் வாய்ஸ் அவரது நடிப்புக்கு பொருந்தவில்லை என்று தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்திருக்கிறது.
குறிப்பாக, மாஸ்டர் படம் தெலுங்கில் வெளியாகாமல் இருந்திருந்தால் இது ஒரு பிரச்னையாக இருந்திருக்காது. ஆனால் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் டயலாக் மற்றும் டப்பிங் வாய்சும் சிறப்பாக அமைந்திருந்ததால் அந்த அளவுக்கு இந்த உப்பென்னா படத்தில் இல்லை என்பதுதான் ரசிகர்களின் விமர்சனமாகி இருக்கிறது.