ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழ் சினிமா உலகம் கடந்த ஆண்டில் சுமார் எட்டு மாதங்கள் வரை முடங்கிப் போயிருந்தது. கொரோனா தொற்றால் படப்பிடிப்புகள் ரத்து, தியேட்டர்களில் காட்சிகள் ரத்து என எந்தப் பணியையும் செய்ய முடியாமல் இருந்தார்கள்.
நவம்பர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ஜனவரி மாதம் பொங்கலுக்கப் பிறகே திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு வர ஆரம்பித்தது. அந்த மகிழ்ச்சி ஒரு மாதம் வரை நீடித்து வருகிறது. இருந்தாலும் தற்போது புதிதாக ஒரு சோதனை வந்துள்ளது. அது அந்த மகிழ்ச்சியை நீடிக்க வைக்குமா என்பது தெரியவில்லை.
'மாஸ்டர்' படம் வெளியான 16 நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு தியேட்டர்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், இனி சிறிய முதலீட்டுப் படங்கள், சிறிய நட்சத்திரங்களின் படங்கள் 30 நாட்களுக்குப் பிறகும், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்கள் 50 நாட்களுக்குப் பிறகும் மட்டுமே ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டுமென தியேட்டர்காரர்கள் தயாரிப்பாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
அது மட்டுமல்ல அதற்கான உத்தரவாதக் கடிதத்தைக் கொடுத்தால் மட்டுமே புதிய படங்களை வெளியிட தியேட்டர்களைத் தருவோம் என பிடிவாதம் பிடித்து வருகிறார்களாம். இதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாம்.
இதனால், இந்த வாரம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட சில படங்களின் வெளியீட்டிற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம். தியேட்டர்காரர்களின் பிடிவாதம் நீடிக்கும் பட்சத்தில் தயாரிப்பாளர்கள் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி வைக்கலாமா எனவும் யோசித்து வருகிறார்களாம்.
தயாரிப்பாளர்களுக்கு தியேட்டர்கள் இல்லை என்றால் ஓடிடி தளம் இருக்கிறது. ஆனால், தியேட்டர்காரர்களுக்கு புதிய படம் இல்லை என்றால் வேறு எந்தப் படத்தைப் போடுவார்கள் எனவும் சில தயாரிப்பாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.