சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ்த் திரையுலகின் இளம் இசையமைப்பாளர்களின் முக்கியமானவர் அனிருத். அறிமுகமாகி சில படங்களுக்கு இசையைமத்ததுமே விஜய், அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரது படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
2011ம் ஆண்டு வெளிவந்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி அனிருத்தை உலகப் புகழ் பெற வைத்தது. யு டியூபில் முதன் முதலில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையைப் படைத்தது.
தொடர்ந்து அவர் இசையமைத்த பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாகி அவரை முன்னணிக்குக் கொண்டு வந்தது. விஜய் நடித்த 'கத்தி, மாஸ்டர்', அஜித் நடித்த 'வேதாளம், விவேகம்', ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட, தர்பார்' என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்தார்.
சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் தான். அந்தக் கூட்டணியில் 'எதிர் நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, வேலைக்காரன்,' ஆகிய படங்கள் வந்துள்ளன. அடுத்து 'டாக்டர்' படத்திலும் இணைந்துள்ளார்கள்.
தெலுங்கில், 'அஞ்ஞாதவாசி, கேங் லீடர், ஜெர்ஸி' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் அனிருத்தின் 25வது படமாக வெளிவர உள்ளது. இப்படத்தின் முதல் சிங்களி காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்குப் பிறகு 'விக்ரம், இந்தியன் 2' ஆகிய படங்கள் வெளிவரலாம்.