மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் |
தமிழ் சினிமாவில் சில முக்கிய பிரபலங்களின் திரைப்படங்கள் கூட சில ஆண்டுகளாக வெளிவராமல் முடங்கி நிற்பது ஆச்சரியமான ஒன்று. தமிழ்த் திரையுலகத்தில் அதிகப் படங்களில் நடிப்பதில் விஜய் சேதுபதிக்கும், ஜிவி பிரகாஷுக்கும் இடையேதான் போட்டி. இருவரும் ஏறக்குறைய பத்து படங்களில் நடித்து வருகிறார்கள்.
ஜிவி பிரகாஷ் 2015ல் வெளிவந்த 'டார்லிங்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் அவர் நடித்த படங்களில் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படம் மட்டுமே வெற்றிகரமாக ஓடியது. மற்ற படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ஓடிப் போனது.
ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி,' ஆகிய படங்கள் எப்போது திரைக்கு வரும் என்பது தெரியாமலே உள்ளது. கடந்த வருடம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அப்படங்களை வெளியிடுவதைப் பற்றி அதன் தயாரிப்பாளர்கள் என்ன முடிவெடுத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. தற்போது, 'காதலைத் தேடி நித்யாநந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சுலர்,' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜிவி.
ஜிவி பிரகாஷ் படங்களைப் போலவே த்ரிஷா நடித்து முடித்துள்ள “பரமபத விளையாட்டு, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்கள் எப்போது வரும் என்பதும் தெரியவில்லை. இந்தப் படங்களைத் தவிர 'ராங்கி, சுகர், பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா.
ஜிவி பிரகாஷ், த்ரிஷா ஆகியோரது படங்களுக்கு இந்த நிலைமை என்றால் தமிழ் சினிமா எப்படியான நிலையில் உள்ளது என்பதை நினைத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும்.