புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா | ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? |

தமிழ் நடிகரான தனுஷ் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'த கிரே மேன்' என்ற படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தில் நடிப்பதற்காக ஹாலிவுட் சென்றுள்ளார் தனுஷ். படப்பிடிப்பு முடியும் வரை மூன்று மாத காலம் அங்கேயே இருப்பார் எனத் தகவல்.
மார்க் கிரீனி எழுதிய 'த கிரே மேன்' என்ற நாவல்தான் திரைப்படமாக உருவாக உள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷைப் பற்றி மார்க் கிரீனி வியப்புடன் பேசியுள்ளார்.
“தனுஷை இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்த போது எனக்கு அவரைப் பற்றித் தெரியாது. அவர் இப்படத்தின் நாயகர்களில் ஒருவராக நடிக்க உள்ளார். எனக்கு டுவிட்டரில் 6000 பாலோயர்கள் தான் இருக்கிறார்கள். அது ஒன்றும் சிறப்பானதல்ல. தனுஷ் என்னை இப்போது டுவிட்டரில் பின்தொடர்கிறார். அவருக்கு 9.7 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார். அது எவ்வளவு சிறப்பானது. அவருடைய வீடியோக்கள் சிலவற்றைப் பார்த்தேன். அவரை 'த கிரே மேன்' படத்தில் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழைக் கடந்து ஹிந்தி, பிரெஞ்ச் படங்களில் நடித்த தனுஷ், 'த கிரே மேன்' படத்தின் மூலம் உலகப் புகழைப் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. அவருடைய 'ரௌடி பேபி' மற்றும் 'ஒய் திஸ் கொவெறி' ஆகிய பாடல்கள் அவரை உலக அளவில் கொண்டு போய் சேர்த்துள்ளது.