ரசிகர்களை சந்தித்த ரஜினி, அட்வைஸ் செய்த கமல், புதுப்புது அறிவிப்புகள், போஸ்டர்கள் : களைகட்டிய 2026 துவக்கம் | 'மார்க்' டப்பிங் படத்துடன் ஆரம்பமான 2026 வெளியீடுகள் | ரஜினி 173... அஸ்வத் மாரிமுத்துவிற்கு அடிக்கிறது அதிர்ஷ்டம் | 2026ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் : வசூல் சாதனை புரியுமா ? | ரஜினி 173, கமல் 237, அஜித் 64, தனுஷ் 55 : பொங்கலுக்குள் அறிவிப்புகள் வருமா? | அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? |

தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக விளங்கிக் கொண்டிருப்பவர் விஜய். அவர் சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 37 வருடங்கள் நிறைவடைகிறது.
1984ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி வெளியான வெற்றி படத்தில் மாஸ்டர் விஜய் ஆக அறிமுகமானார். விஜயகாந்த், விஜி மற்றும் பலர் நடித்த அப்படத்தை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். அதன்பிறகு சில படங்களில் நடித்த மாஸ்டர் விஜய் பின்னர் 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அன்று மாஸ்டர் விஜய் ஆக அறிமுகமான விஜய் இன்று மாஸ்டர் விஜய் ஆக உயர்ந்து நிற்கிறார். அவருடைய அப்பாதான் விஜய்யின் அறிமுகத்திற்குக் காரணம் என்றாலும் தனித் திறமை இல்லை என்றால் இந்த அளவிற்கு உயர்ந்த நடிகராக வளர்ந்திருக்க முடியாது.
தன்னுடைய நடனத் திறமையை வளர்த்துக் கொண்டு, ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவர் வசூல் நாயகனாக உயர்ந்தார். சொல்லப் போனால் அவர் நாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படமே ஒரு தோல்விப் படம்தான்.
அதற்குப் பின் சில கமர்ஷியல் படங்களில் நடித்து ஓரளவிற்கு முன்னுக்கு வந்தவர் அதன்பின்னும் தொடர்ச்சியாக தோல்விப்படங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு கால கட்டத்திற்குப் பிறகுதான் தனக்கான சரியான கதையையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து இன்று முன்னணி ஹீரோக்களில் முதன்மையானவராக இருக்கிறார்.
மாஸ்டர் வெற்றியைக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள் இன்று மாஸ்டர் விஜய் அறிமுகமானதையும் கொண்டாடலாம்.