சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தமிழில் தசாவதாரம் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தற்போது மீண்டும் தமிழில் நடிக்கிறார்.
ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு,மலையாளம் கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாரிக்கும் படம் பாம்பாட்டம். ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சென், யாஷிகா ஆனந்த் நடிக்கிறார்கள். சவுகார் பேட்டை, கொம்பு, தம்பி வெட்டோத்தி சுந்தரம் படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.
பேண்டசி படமான இதில் மல்லிகா ஷெராவத் நாகமதி இளவரசியாக நடிக்கிறார். 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை, ஹாரர் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்க உள்ளது.