33 ஆண்டுகளை நிறைவு செய்த ஏஆர் ரஹ்மான் | விமர்சனங்களில் பின்னடைவைச் சந்திக்கும் 'வார் 2' | அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் |
அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் த்ரிஷாவின் மகளாக, விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவின் மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் பேபி அனிகா சுரேந்திரன். தற்போது குமரிப்பருவத்தில் இருக்கும் அனிகா, கதாநாயகியாக மாறுவதற்காக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அந்தவகையில் தெலுங்கில் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமாகிறார் அனிகா.
மலையாளத்தில் கடந்த வருடம் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'கப்பேலா' என்கிற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அனிகா. இந்தப்படத்திற்கு புட்டபொம்மா என டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் தெலுங்கில் வெளியான, பல மில்லியன் பேரால் பார்த்து ரசிக்கப்பட்ட புட்டபொம்மா பாடலில் இருந்து அந்த பிரபலமான வார்த்தையையே டைட்டிலாக வைத்தால் படத்திற்கு ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் என்பதால் இந்த ஐடியாவாம்.