அமெரிக்காவில் 4 மில்லியன் வசூலை நெருங்கும் 'கூலி' | 50 ஆண்டுகள்... தமிழ் சினிமாவின் 'ராஜா' ரஜினிகாந்த் | இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் |
ஆஸ்கர் விருது வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்றைய தேதியில் இந்தியாவின் டாப் ஒன் இசை அமைப்பாளர். இவர் அடுத்த பாய்ச்சலாக படத் தயாரிப்பில் குதித்திருப்பதோடு படத்தின் கதையையும் எழுதி உள்ளார். படத்தின் தலைப்பு 99 சாங்ஸ். இதனை விஷ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கி உள்ளார். ஏஹன் பட், எடிசி வர்க்கீஸ், டென்சின் தல்ஹா உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
இசையால் வாழ்க்கையை இழந்த குடும்பத்தில் இருந்து வரும் ஒரு இசை கலைஞனால் அந்த குடும்த்தில் என்ன மாற்றத்தை கொண்டு வரமுடிகிறது. அவனின் இசை பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பது மாதிரியான கதை.
படத்தின் டீசர் வெளிவந்ததும் அதை பார்த்த ரசிகர்கள் இது ஏ.ஆர்.ரஹ்மானின் சொந்த கதை என்று பதிவிட்டு வந்தார்கள். இதற்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது: தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானேன். அதன்பிறகு மும்பைக்கு போனேன். அங்கேயும் வெற்றி பெற்றேன். அதன்பிறகு அமெரிக்கா போனேன். அங்குதான் என்னிடம், உங்களிடம் ஒரு கதை இருக்கிறதா என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டபோது என் கையில் கதை எதுவும் இல்லை. அப்போதான் நான் யோசித்தேன் நாமும் ஏன் கதை எழுத கூடாது என்று. இதனால் மற்றவர்கள் எப்படி கதை எழுதுகிறார்கள் என்பதை கவனித்து நான் எழுதிய கதை தான் 99 சாங்ஸ்.
சிலர் இதனை என் கதை என்கிறார்கள். நிச்சயமாக இல்லை, நான் எழுதிய கதை. என்னுடைய கதை எல்லோர் வீட்டிலும் நடக்கிற கதைதான். ஒரு அம்மா தன் பிள்ளையை உயரத்துக்கு கொண்டு போகிற கதை தான் என்னுடையது. 99 சாங்ஸ் கதையை மூன்று நான்கு வருடங்களாக எழுதினேன். இதில் நடிப்பதற்கு 750 பேர் வரை ஆடிசன் நடத்தி தேர்வு செய்தேன். இதில் நடித்துள்ள ஏஹன் பட்டை ஒரு வருடம் இசை கற்க வைத்து அதன்பிறகே நடிக்க வைத்தோம். என்றார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் ஷங்கர், கே.எஸ்.ரவிகுமார், இசை அமைப்பாளர்கள் அனிருத், யுவன்சங்கர் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், பாடகர்கள் சித் ஸ்ரீராம், பென்னி தயாள், ஷர்த்க் கல்யாணி, சேஷா த்ரிப்பாதி, அர்ஜித் சிங், பாடல் ஆசிரியர்கள் விவேக், மதன் கார்க்கி, குட்டி ரேதி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.