இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கொரியன் படமான ஓல்ட்பாய், மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, புகழ்பெற்ற தி ரிவினென்ட், தி ரைய்டு படத்தொடர் எல்லாம் இம்மாதிரி ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சிகளுக்காக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இம்மாதிரியான முயற்சிகள் தீவிரமாக நிகழ்ந்ததில்லை. முதல் முறையாக பிரமோத் பிலிம்ஸ் நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது. ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் ஆக்சன் காட்சியாக, இக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சாம் ஆண்டன் இதுகுறித்து கூறியதாவது, இது எனது நீண்ட நாள், கனவு முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டரும், பல காலம் முன்பாகவே, இப்படி ஒரு ஆக்சன் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். இப்படத்தில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் சுறுசுறுப்பும், உத்வேகமும் நிறைந்த நடிகர் அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால் தான் இது சாத்தியமானது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியை திட்டமிட்டு எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. திட்டமிட்ட பிறகு ஒரு நாள் மட்டுமே நாங்கள் ரிகர்சல் செய்தோம். படக்குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பால் இக்காட்சி அற்புதமாக வந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு அதர்வா இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக மாறிவிடுவார்.
பிரமோத் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறியதாவது, இந்த ஆக்சன் காட்சி, சினிமாவில் ஆக்சன் படங்களுக்கே ஒரு பெரும் மைல்கல்லாக இருக்கும். நடிகர் அதர்வா காட்டிய அர்ப்பணிப்பு, அவரது உழைப்பு போற்றப்பட வேண்டியது. இந்த அற்புதமான காட்சியை வடிவமைத்ததற்கு திலீப் சுப்பராயன் மாஸ்டருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த காட்சியை மிக அழகாக படம்பிடித்ததில் ஒளிப்பதிவு குழுவினரின் பங்கு மிகப்பெரியது.
இவையனைத்திற்கும் தலைமை வகித்த, மிகப்பெரும் கற்பனை திறன் மிக்க இயக்குநர் சாம் ஆண்டனுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களின் பிரமோத் பிலிம்ஸ் சார்பில் இந்த ஆக்சன் காட்சி உலக சினிமா வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் பெருமை கொள்கிறோம்.