சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் ஆகியோரது நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள 'காடன்' திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கில் வனசரக அதிகாரியாக சம்பத்ராம் நடித்திருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், காடன் படத்தின் சண்டை காட்சியில் ராணாவுடன் நடித்தபோதுதான் விபத்து ஏற்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து சம்பத்ராம் கூறியதாவது: காடன் படப்பிடிப்பை என்னால் மறக்க முடியாது. 7 நாட்கள் படமாக்கப்பட்ட சண்டைக்காட்சியில் தான் எனக்கு அடிபட்டது. ஒரிஜினலாகவே என்னை ஸ்டண்ட் மேன் ஒருவர் தாக்க, நெஞ்சில் அதிகமாக வலி ஏற்பட்டு மயக்கமடைந்தேன். இருந்தாலும், வலியுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு நடித்தேன்.
பிறகு சென்னை வந்த போது தான், நெஞ்சில் இரத்தம் உறைந்திருப்பது தெரிய வந்தது. அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தேன். இப்படி வலியோடு நடித்தாலும், என் கதாப்பாத்திரத்திற்கும், நடிப்புக்கும் கிடைக்கும் பாராட்டுகள் பெரும் மகிழ்ச்சியை தருகிறது.
தற்போது சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறேன். பிரபு சாலமனின் இணை இயக்குநர் மணிபால் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கிறேன். பெல்பாட்டம், தொல்லைக்காட்சி, நாரப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறேன். என்றார்.