மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? |

மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். கமல் தேர்தலில் வேலைகளில் பிஸியாக இருந்தால் இதன் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது. மேலும் லோகேஷ் கடந்தவாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். தற்போது தேர்தலும் முடிந்துவிட்டது. இந்தநிலையில் கமலும் தானும் பிரச்சார வேனில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அந்தப்படத்தின் டீசரின் இறுதியில் கமல் பேசும் வசனமான 'ஆரம்பிக்கலாமா' என்கிற வார்த்தையை பயன்படுத்தி, படபிடிப்பு மீண்டும் துவங்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே இப்படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் பஹத். அந்தவகையில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களை தொடர்ந்து பஹத் பாசில் தமிழில் நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.