சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவையும், நடிகர்களுக்கு வைக்கப்படும் பட்டப் பெயர்களையும் பிரிக்கவே முடியாது. புரட்சித் தலைவர் என்பதிலிருந்து புரட்சித் தளபதி வரை எத்தனையோ பட்டப் பெயர்கள் தமிழ் சினிமாவில் பரவிக் கிடக்கிறது.
சமயங்களில் அந்த பட்டப் பெயர்கள் கூட சர்ச்சையை ஆரம்பித்து வைக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற ஒரு சர்ச்சை எழுந்தது. அஜித், விஜய் இருவரில் யார் அதற்குப் பொருத்தமானவர்கள் என்று பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், பலரும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான் என்று சொல்லி அந்த சர்ச்சைக்கு ஒரு முடிவு கொடுத்தனர்.
இப்போது மீண்டும் அந்த 'சூப்பர் ஸ்டார்' சர்ச்சை ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. 'இளைய தளபதி' விஜய், 'தளபதி' விஜய் ஆக பிரமோஷன் ஆனதால், 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' சிம்பு இனி வரப் போகும் படங்களில் 'சூப்பர் ஸ்டார்' என மாற்றிக் கொள்ளலாமா என யோசித்து வருகிறாராம்.
அதற்கு முன்னோட்டமாக அடுத்து அவர் நடிக்க உள்ள ஒரு படத்திற்கு 'சூப்பர் ஸ்டார்' என்று தலைப்பு வைத்துப் பார்க்கவும் முடிவு செய்துள்ளார்களாம். எப்படியும் இந்தத் தகவல்கள் செய்திகளாக வெளியாகும். அதற்கு என்ன ரியாக்ஷன் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து மாற்றங்கள் நடக்கலாம் என்கிறார்கள்.