தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமாவில் இப்போது இருக்கும் தணிக்கை முறையைப் போல அந்தக் காலம் தொட்டே இருந்திருந்தால் இதற்கு முன்பு வந்த சாதிய படங்கள் பல வராமலே போயிருக்கும். அப்படி பல சாதிப் பெருமைகளைச் சொல்லி வந்த படங்கள் நிறையவே உண்டு. ஆனால், இப்போது எந்த ஒரு சாதியைப் பற்றியும் வெளிப்படையாகவோ, ஏன் மறைமுகமாகவோ கூட சொல்ல முடியாது. வேண்டுமானால் 'குறியீடு' மூலமாகச் சொல்லிக் கொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சாதிய கருத்துக்களை முன் வைத்து சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில படங்கள் அந்த மக்களின் பிரச்சினைகளை, தேவைகளைப் பேசினாலும் சில காட்சிகள் மற்ற சாதிகள் மீதான வன்மத்தை குறியீடு மூலம் கோடிட்டும் காட்டுவது தேவையற்ற மோதல்களை உருவாக்கி விடுகிறது.
தற்போதைய தலைமுறையினர் முடிந்த அளவிற்கு சாதி பாகுபாடு பார்க்காமல் பழகி வருகிறார்கள். ஆனால், அவர்களிடத்தில் இந்த மாதிரியான படங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பாகுபாட்டை விதைத்து விடுகின்றன.
கடந்த வாரம் வெளிவந்த 'கர்ணன்' படம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு சாதிய மோதலை, கருத்து மோதலை, சிலரிடம் வன்மத்தை வெளிப்படுத்தும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
படத்தை ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். சாதி என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தி போலத்தான். எப்போது எந்தப் பக்கம் பதம் பார்க்கும் என்பதைச் சொல்ல முடியாது.
தங்களைப் பற்றி தங்கள் பெருமையைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சமூகம் பேசிக் கொள்ளும் போது யாரும் கவலைப்பட மாட்டார்கள். அதே சமயம் மற்ற சமூகத்தைப் பற்றி ஏதோ ஒன்று சொல்லப் போனாலும் அந்த மற்ற சமூகத்தினர் அவர்கள் பக்கத்து வாதத்தை எடுத்து வைக்க முன் வருவார்கள்.
ஒரு காலத்தில் நடந்து போன, மறக்க வேண்டிய வரலாற்று விஷயங்களை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது ஒரு பதிவா, அல்லது பாதிப்பா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம், அதை 'சாதி' என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிடாதீர்கள் படைப்பாளிகளே....