வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சினிமா நடிகைகள் மீதும், நடிகர்கள் மீதும் பெரும் அபிமானம் செலுத்துபவர்களாக சில ரசிகர்கள் இருக்கிறார்கள். அம்மாதிரியான ரசிகர்களால் தான் சினிமாவும், தாங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை சில சமயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் அடிக்க நடிகைகள், நடிகர்கள் ரசிகர்களுடன் சாட் செய்வது வழக்கம். தங்களை ரசிகர்களுடன் இன்னும் அதிகமாக 'கனெக்ட்' செய்து கொள்ள இப்படி சாட்களை நடத்துகிறார்கள்.
நடிகை ஸ்ருதிஹாசன் நேற்று தனது ரசிகர்களுடன் சாட் ஒன்றை நடத்தினார். அதில் ரசிகர் ஒருவர் மிகவும் மரியாதையுடன் 'மேடம், ப்ளீஸ் உங்களது வாட்சப் நம்பரைக் கொடுங்கள்' என்று கேட்டிருக்கிறார். அவ்வளவு மரியாதையாகக் கேட்ட ரசிகருக்கு போலீஸ் அவசர உதவி போன் நம்பரான 100 என்ற நம்பரைக் கொடுத்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். அதை நகைச்சுவையாகச் சொல்வதென்றால் ஒரு ஸ்மைலியாவது போட்டிருப்பார். ஆனால், அப்படியும் போடவில்லை.
மரியாதையாகக் கேட்ட ஒரு ரசிகரிடத்தில் இப்படியா அவர் நடந்து கொள்வது என ஸ்ருதியைக் கண்டிக்கும் வகையில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.