‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் |
விஜய் டிவியில் ஒளிபரப்பான குத் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நேற்றுடன்(ஏப்., 14) இந்த நிகழ்ச்சி முடிந்தது. இந்த நிகழ்ச்சி பலருக்கும் சினிமா வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. பவித்ரா ஒரு படத்தில் நாயகியாக நடிக்கிறார். புகழ் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.
அஸ்வின் சில ஆல்பங்களில் நடித்து வந்தார். இப்போது முதன்முறையாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரி இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அஸ்வின் உடன் குக் வித் கோமாளி புகழும் இணைந்து நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குனர் ஹரி அளித்த பேட்டி: முற்றிலும் காதலை மையமாக கொண்ட காமெடி படம் இது. கதைக்கு அஸ்வின் பொருத்தமாக இருந்ததால் அவரை தயாரிப்பாளர் பரிந்துரைத்தார். இப்படத்திற்கு பின் காமெடியில் சினிமாவில் தனக்கான இடத்தை புகழ் பிடிப்பார். நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. இப்படத்தில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். மே இறுதியில் படப்பிடிப்பை துவக்க உள்ளோம் என்றார்.
இதுதொடர்பாக அஸ்வின் வெளியிட்ட வீடியோவில், ‛‛நான் இவ்வளவு காலம் போராடியது, என் கனவு சினிமாவில் ஹீரோவாக நடிப்பது. இப்போது நடந்துள்ளது என்றார். மேலும் இந்தப்படத்தில் என்னுடன் எனக்கு பிடித்த, உங்களுக்கு பிடித்த ஒருவர் நடிக்கிறார். அவர் தான் புகழ் என்ன சொல்ல, புகழ் வேகமாக ஓடி வந்து அஸ்வின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறார். ‛‛மச்சான் தயவோடு மலையேறணும் சொல்வாங்க. அதுதான் இது. மகிழ்ச்சியாக உள்ளது'' என்கிறார் புகழ். இந்த வீடியோ வைரலானது.