தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கொரோனா தளர்வுகள் கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது இந்தியாவிலிருந்து பல சினிமா பிரபலங்கள் மாலத் தீவிற்கு தொடர்ச்சியாக சென்று வந்தார்கள். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல சினிமா பிரபலங்கள் அங்கு சென்று வந்தார்கள். குறிப்பாக நடிகைகள் பலரும் மாலத் தீவுப் பயணத்தின் போது பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு பரபரப்பூட்டினார்கள்.
நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்து அங்கு தான் தேனிலவு சென்றார். சுமார் இரண்டு வாரங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து விதவிதமான புகைப்படங்களை தினமும் பதிவிட்டார். டாப்சி அவருடைய காதலருடன் சென்றார். சமந்தா, நாகசைதன்யா ஜோடி மற்றும் நடிகைகள் வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா, ரைசா, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் விஷ்ணு விஷால், பிக்பாஸ் ஷிவானி என பலர் அந்தப் பட்டியலில் அடக்கம்.
கடந்த வாரம் ஹிந்தி காதல் ஜோடி ஆலியா பட் - ரன்வீர் சிங், திஷதா பதானி, டைகர் ஷெராப் என பலரும் சென்றனர். தற்போது இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் வர மாலத் தீவு சுற்றுலாத் துறை தடை விதித்துவிட்டது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. ஆனால், கோவிட் காரணமாகத்தான் தடை செய்கிறோம் என குறிப்பிடவில்லை.
இத்தடை நீங்கும் வரை நமது சினிமா பிரபலங்கள் மாலத்தீவிற்கும் செல்ல முடியாது, கிளாமர் புகைப்படங்களையும் வெளியிட முடியாது.