தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

அயலான், இந்தியன்-2 படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ஹிந்தியில் நான்கு, தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே ஹிந்தி, தெலுங்கில் வெளியாகின.
அதுகுறித்து தற்போது ஒரு பேட்டியில் ரகுல் கூறும்போது, ‛‛கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்களுடன் இணைத்து என்னைப்பற்றி பலதரப்பட்ட காதல் கிசுகிசுக்கள் வெளியாகின. அது எல்லாமே பொய்யான செய்திகள் என்பதால் அவற்றுக்கு பதில் கொடுக்கவில்லை. அப்படி நான் அமைதியாகி விட்டதால் ஒரு கட்டத்தில் அந்த வதந்திகள் மாயமாகி விட்டன. இப்போது என்னை பற்றிய காதல் செய்திகள் வருவதில்லை. இது நிம்மதியை தருகிறது என்று தெரிவித்துள்ள ரகுல், இதுவரை யாருடனும் நான் காதலில் விழுந்ததில்லை என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.