அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? |
மை சன் இஸ் கே என்ற இந்திப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் குமார். முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர், தனது இரண்டாவது படமாக N4 படத்தை இயக்கியுள்ளார். தரம்ராஜ் பிலிம்ஸ் , பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.
வடசென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல், கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அப்சல் ஹமீது , வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா என பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படம் கோல்கட்டாவில் நடந்த சர்வதேச கல்ட் பிலிம் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொண்டது. போட்டியின் நடுவர்கள் லோகேஷ் குமாருக்கு சிறந்த இயக்குனர் விருதை அளித்துள்ளனர். இதற்கு முன்பு இந்த படம் 11வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.