ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா தொற்று பரவாத இடமேயில்லை என்று சொல்லுமளவிற்கு சினிமா பிரபலங்கள் பலருக்கும் பரவியுள்ளது. சிலர் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டும், சிலர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டும் வருகிறார்கள். இயக்குனர் வசந்தபாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா சிகிச்சை அனுபவத்தை கடந்த சில நாட்களாக முகப்புத்தகத்தில் பதிவு செய்து வருகிறார்.
சற்று முன் அவர் பதிவிட்டுள்ளதாவது : ''கடந்த மாதம் ஏப்ரல் 21ம் தேதி கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டு நோய் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மிக்க கடினமான காலக்கட்டம் மருத்துவர்களின் கணிப்பைத் தாண்டி என் நோய்த் தீவிரம் அடைந்தது.
இடையறாது நாலா பக்கமும் கிடைத்த மருத்துவ ஆலோசனைகளால் நண்பர்களின் முயற்சியால் பெரும் மருத்துவர்களின் கண்காணிப்பால் செவிலியர்களின் கூர்மையான அக்கறையால் மருத்துவ உதவியாளர்களின் தன்னலமற்ற பணியால் பெருந்தொற்றை அங்குலம் அங்குலமாக கடந்தேன்.
இலக்கியமும் வாசிப்பும் மனசோர்வின்றி எனை இலவம் பஞ்சைப் போல மிதக்க வைத்தது. இருபது நாட்கள் கடந்து விட்டதால் கொரோனா தொற்றில்லாத மருத்துவ வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளேன். அடுத்த வாரத்தில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும், என் குருநாதர்களும், சக இயக்குநர்களும், திரையுலக நண்பர்களும், முகமறியா முகப்புத்தக நண்பர்களும் இடையறாது என் மீது பொழிந்த பேரன்பில் மெல்ல மெல்ல வாதையின் பெருங்கொடுக்கிலிருந்து விடுபட்ட வண்ணம் இருக்கிறேன்.
அன்பு சூழ் உலகில் வாழ்வது வரம், மீண்டு(ம்) வாழ வருகிறேன்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.