அரங்கம் அதிர, விசிலு பறக்க... வெளியானது கூலி : ரசிகர்கள் கொண்டாட்டம் | ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் |
பொறுப்பற்ற மக்களே கொரோனா பரவலுக்கு காரணம்' என நடிகர் ‛கூல்' சுரேஷ் கூறியுள்ளார். அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வரவேற்பை பெற்றுள்ளது.
காமெடி மற்றும் வில்லன் வேடங்களில் நடித்தவர், ‛கூல்' சுரேஷ், நண்பர்களுடன் இணைந்து நற்பணிகளை செய்து வரும் இவர், ‛பொறுப்பற்ற மக்களே கொரோனா பரவலுக்கு காரணம்' என அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசிய வீடியோ முகநுாலில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நிறைய பேர் அரசு மருத்துவமனையையும், நிர்வாகத்தையும் குறை கூறி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். ‛அரசு மருத்துவமனைக்கு யாரும் வராதீர்கள்' என்றெல்லாம் சொல்கின்றனர். ‛பிணத்தை எரிக்க கூட முடியவில்லை' என்கின்றனர். ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்காமல், ஊரை சுற்றி விட்டு, வியாதியை வாங்கி மற்றவர்களுக்கும் தந்து விட்டு அப்புறம் அம்மாவுக்கு, ஆயாவுக்கு உடல் சரியில்லை என கதற வேண்டியது. குறையை நம்மிடம் வைத்துக் கொண்டு மற்றவர்களை குற்றம் சாட்டக்கூடாது. நோயை மற்றவர்களுக்கு பரப்ப கூடாது என்று தான் ஊரடங்கு போட்டுள்ளனர்.
காய்கறி, மளிகை, மீன்கடை எல்லாம் இன்றோடு மூடி விடுகிற மாதிரி, இன்றே சாப்பிட்டு விட்டு செத்து விட வேண்டும் என்பது போல், முண்டியடித்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குகின்றனர். ஒருவரை நான், ‛எங்கு செல்கிறீர்கள்?' என கேட்டால், ‛துடைப்ப கட்டை வாங்க போகிறேன்' என்கிறார். அவரை அதனாலேயே அடிக்க வேண்டும். அவர் வீட்டில் இருவர் கொரோனாவால் பாதித்துள்ளனர். வெளியே பரவாமல் இருக்க வீட்டில் இருக்க சொன்னால் அவர் வெளியே சுற்றி வருகிறார். இப்படி இருந்தால் கொரோனா எப்படி குறையும்.
அரசு தரும் சில சலுகைகளை நாம் தவறாக பயன்படுத்த கூடாது. தயவு செய்து தேவைக்கு மட்டும் வெளியே போங்கள். நாம் முயற்சித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.