இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
ஹன்சிகா சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் மஹா. இது அவருக்கு 50வது படம். இதில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் அதாவது ஹன்சிகாவின் காதலனாக நடித்துள்ளார். இந்த படத்தை என்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் வி.மதியழகன் தயாரித்திருக்கிறார். ஸ்ரீகாந்த், தம்பிராமையா, கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
கடந்த ஆண்டே படத்தின் பணிகள் முடிந்து விட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிவராமல் இருந்தது. தற்போது 2வது அலை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிடும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி அந்தப் படத்தின் இயக்குனர் யு.ஆர்.ஜமீல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு இந்தப் படத்தை இயக்குவதற்காக 24 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது ஆனால் இதுவரையிலும் 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளது, 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தர வேண்டியிருக்கிறது.
மேலும், இந்தப் படத்தின் ஒரிஜினல் கதாசிரியரான எனக்கே தெரியாமல் கதைகளில் மாற்றம் செய்து உதவி இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள். இதனால் எனக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதுவரையிலும் படத்தை ஓடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மனுவுக்கு பதில் அளிக்குமாறு படத்தின் தயாரிப்பாளர், உதவி இயக்குநர், படத் தொகுப்பாளர் மூவருக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது.