தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த வருட கொரோனா தொற்றின் முதல் அலை ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
கடந்த வருட கொரோனாவிற்கே தியேட்டர்களை சுமார் 8 மாதங்கள் வரை மூடி வைத்திருந்தார்கள். இந்த இரண்டாவது அலையில் கடந்த 20 நாட்களாக தியேட்டர்களை மூடி வைத்திருக்கிறார்கள். இந்த அலையின் தாக்கம் ஜுலை வரையிலும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
அதன்பிறகு கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் தான் அதற்கடுத்த சில மாதங்களிலாவது தியேட்டர்களைத் திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கெனவே கடந்த வருடம் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஓரிரு படங்கள் மட்டும் தான் லாபத்தைத் தந்தன.
பல தியேட்டர்களை திறக்காமலேயே வைத்திருந்தார்கள். இந்த வருடமும் அப்படிய நீடித்தால் நூற்றுக்கணக்கான தியேட்டர்களை நிரந்தரமாக மூடும் அபாயம் இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாவும் சினிமா தொழிலையும், தியேட்டர்களையும் நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் அலையின் போதே மீள முடியாத தியேட்டர்கள் இந்த இரண்டாவது அலையில் மீள்வது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.