வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ரஜினி, கமல் தொடங்கி அநேக ஹீரோக்களின் படங்களில் நடித்தவர் வில்லன் நடிகர் பொன்னம்பலம். இந்தியன், நாட்டாமை, முத்து போன்ற படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. பிக்பாஸ்-2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்த சிகிச்சைக்கு பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ரூ. 2 லட்சம் அளித்து பொன்னம்பலத்திற்கு உதவி செய்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு நன்றி தெரிவித்து ஒரு உருக்கமான வீடியோ வெளியிட்டுள்ளார் பொன்னம்பலம்.
அந்த வீடியோவில், ரொம்ப நன்றி அண்ணா. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நீங்கள் கொடுத்த ரூ. 2 லட்சம் பணம் மிகப்பெரிய உதவியாக இருந்தது. உயிருள்ள வரை உங்களை மறக்க மாட்டேன். உங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஆண்டவன் உங்களை எப்போதுமே ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக வைத்திருப்பான். ஜெய் ஸ்ரீராம் நன்றி என தெரிவித்துள்ளார் பொன்னம்பலம்.