தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு காரணமாக இந்தியாவில் சினிமா துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 10,000 கோடிக்கும் மேல் படத் தயாரிப்புகளில் முடங்கியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்குத் திரையுலகில் சில படங்கள் அதிக பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. அப்படியான படங்களில் மூன்று படங்களின் மூலம் மட்டுமே சுமார் 1000 கோடி முடங்கிப் போயுள்ளது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் 300 கோடி, பிரபாஸ் நாயகனாக நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படம் மூலம் 350 கோடி, 'ஆதி புருஷ்' படம் மூலம் 500 கோடி இவற்றின் மூலம் மட்டுமே 1150 கோடி முடங்கியுள்ளது.
மேலும், பிரபாஸ் நடிக்கும் மற்றொரு படமான 'சலார்' மூலம் 150 கோடி மற்றும், ”புஷ்பா - 160 கோடி, ஆச்சார்யா - 150 கோடி, சர்க்காரு வாரி பாட்டா 100 கோடி, லிகர் - 100 கோடி” என கூடுதலாக 760 கோடி, இவற்றுடன் மேலும் சில முன்னணி நடிகர்களின் தெலுங்குப் படங்களைக் கணக்கில் கொண்டால் 2000 கோடியைத் தாண்டும்.
பெரிய படங்கள் எவ்வளவு நாள் தாமதமாகிறதோ அதற்கேற்றபடி அதன் வட்டியும் கூடுதலாகும். அதனால் படத்திற்கான செலவுகளில் இன்னும் சுமை ஏறும். கொரோனா அலை சீக்கிரமே முடிவுக்கு வந்து படங்களை எப்போது முடித்து வெளியிடப் போகிறோம் என தெலுங்குத் திரையுலகினர் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.