துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
‛‛குற்றம் செய்தவரை விட்டு விட்டு, பள்ளியை குறி வைப்பது ஏன்?'' என, நடிகர் விஷாலுக்கு, பா.ஜ., நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையை போலீசார் தீவிரமாக்கியுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் விஷால் டுவிட்டரில், ‛இந்த விஷயம் என்னை பயமுறுத்துகிறது. பத்மா சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்' என, பதிவிட்டார்.
விஷாலின் இப்பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகையும், பா.ஜ., நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் அளித்த பேட்டி: பெண்களுக்கான பாலியல் குற்றங்களுக்கு, குரல் கொடுப்பதில் நான் முன் வந்து நிற்பேன். எனக்கும் அந்த பள்ளிக்கு எந்த உறவும் இல்லை. நான் கேட்பதெல்லாம், குறிப்பிட்ட நபரின் குற்றச் செயல்களுக்கு, அப்பள்ளியை முன்னிருத்துவது ஏன்?
விஷாலின் டுவிட்டர் பதிவில், குற்றவாளியின் பெயரை விட்டுவிட்டு, அப்பள்ளியின் பெயரை மட்டும் பதிவிடுகிறார். அவர் மட்டுமல்ல பலரும் அப்பள்ளியையே குறி வைக்கின்றனர். இது குறிப்பிட்ட நபர் மீதான புகார் என்பதையும் தாண்டி, ஒரு சமூகத்தை முடக்கப்பார்க்கும் செயலாகவே தெரிகிறது.
இதுபோன்ற நடவடிக்கை அப்பள்ளியில் பயிலும், பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். திரையுலகில் ஒரு நடிகைக்கு பாலியல் தொல்லை நேர்ந்தால் அதற்காக சினிமாவையே விஷால் முடக்கி விடுவாரா? முதலில் விஷால், சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறத்தல்களை கண்டித்து தடுக்க வேண்டும். சினிமாவில் பெண்கள் உதவி நாடி வந்த போது, அங்கு விஷால் ஹிரோயிசத்தை காட்டியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.